BAN vs WI - முதல் Test Review !

இந்த test match பொறுத்த வரைக்கும், One of the best chase everனே சொல்லலாம். அதே நேரத்துல, ஒரு upset நிகழ்த்தி காமிச்சிட்டாங்கன்னு கூட சொல்லலாம். நான் Upsetன்னு சொல்ல மாட்டேன், அப்படி சொல்லிட்டா அப்போ Weakகான team ஜெயிக்கவே கூடாதுன்னு அர்த்தமாயிடும். End of the Day, Cricket has won !. அப்படி என்னடா சம்பவம் நடந்துச்சு ? இந்த blog படிச்சு பாருங்க.

Chattogram நகரத்துல பங்களாதேஷுக்கும் வெஸ்ட் இண்டிஸ்க்கும் இடையில match நடக்குது. Toss பொறுத்த வரைக்கும், Bangladesh ஜெயிச்சு batting choose பன்றாங்க. முதல் நாள்ல பொறுத்த வரைக்கும், Spinகு ரொம்பவே நல்லா எடுத்து கொடுத்துச்சு. அதுக்கு ஒரு சிறந்த example, Warricanனோட spell தான். 

அவரோட spellல மட்டும் பாத்து பாத்து விளையாடுனாங்க Bangladesh. ஆனா அதை தாண்டி, மத்த எல்லாருக்கும் பொளக்கல்ஸ் தான். தொடக்கத்துல wicket விட்டாலும், அதை பத்தி சுத்தமா கவலை படாம, debut matchல தன்னோட 50ய கொண்டு வந்த Shadman Islam சரி, middle orderல ரொம்ப நேரம் pitchல நின்னு, pressure absorb பண்ண Mominul Haque சரி, இரண்டு தூணா செயல்பட்ட Rahim - Shakib சரி, ஏன் இதெல்லாத்தையும் தூக்கி சாப்புட்ற அளவுக்கு, low orderல வந்து century அடிச்ச Mehedy Hasanனும் சரி, பங்களாதேஷ் teamமூக்கு ஒரு விடியலா அமஞ்சியிருக்கு.

குறிப்பா Mehedy Hasanனோட அந்த ஒரு 100, அது தான் West Indiesக்கு கடைசி inningsல அவ்ளோ பெரிய target கொடுக்க ஏதுவா இருந்துச்சு. முதல் inningsல 350குள்ள முடிய வேடனா Bangladesh'ஓட ஆட்டம் 430க்கு போக முக்கிய காரணமா இருந்தது, இவரு தான். அந்த difference, அது தான் இவரோட ஆட்டம் !

அதே நேரத்துல Jomel Warricanனும் 4 wicket haul எடுக்குறாரு. Test team பொறுத்த வரைக்கும், ஓரளவுக்கு experience இருக்கு. ஆனாலும், என்ன பொறுத்த வரைக்கும், West Indies ரொம்ப அருமையா போராடுனாங்க. 

திரும்ப West Indies battingக்கு வர்றாங்க. Asian nationனே spinல தடுமாறும்போது, West Indies தடுமாறாதா ? தடுமாறும், நிச்சயமா தடுமாறும். ஆனா, பிள்ளையார் சுழி போட்டது Mustafizur Rahman தான். நல்ல cutters வீசிக்கிட்டு இருந்தாரு. Basic Foot Movementல பண்ண தப்புனால, சில wickets விழுது. ஆனாலும், Kraigg Brathwaite வேற ரகத்துல ஆடிட்டு இருந்தாரு.

Kraigg Brathwaite பொறுத்த வரைக்கும், Pure test batsman. எங்க எப்போ அடிக்கணும், எவ்ளோ patience காட்டணும்னு அந்த meterர சரியா புடிச்சு ஆடுற ஒரு batsman தான் Kraigg Brathwaite. நல்ல half century post பண்ணுறாரு. ஆனா, அவரோட dismissal தான், அவ்ளோ பக்காவான sketch. அந்த pitchல எந்த அளவுக்கு turn இருக்குனு ஒரு demo வேணும்னா அந்த wicketடோட replayவ நீங்க பார்க்கலாம். 

Technically யாரெல்லாம் strongகா இருந்தார்களோ, அவங்க எல்லாம் பொழச்சிகிட்டாங்க. அதுல முதல்ல Kraigg Brathwaite. அதுக்கு அடுத்து Blackwood. New Zealandலயும், Englandலயும் ஒரு பக்கம் இவங்க Team சொதப்பும்போது, இன்னொரு பக்கம் போராட்டத்தோடு உச்சத்தை காமிச்சவரு தான் இவரு. இங்கயும் ரொம்பவே அழகா விளையாடுறாரு. இவரோட Joshua Da Silvaவும் நல்லா ஆடுனாரு. இவங்க ஆடுமன்போது எப்படியோ அந்த trail runs'அ reach பண்ணிடுவாங்கன்னு எதிர்ப்பாத்தோம், ஆனா இவங்க அவுட் ஆனா 10 நிமிஷத்துல மொத்தமும் முடிஞ்சு போச்சு. 259 runsக்கு all out ஆவுறாங்க. 

திரும்ப Bangladesh battingக்கு வர்ராங்க. இந்த முறை, இன்னும் உக்கிரம West Indies wicketsஎடுக்குறாங்க . குறிப்பா Jomel Warrican. ஆனாலும், அதெல்லாம் தாண்டி Mominul Haque நல்ல century அடிக்குறாரு. கடைசில சில சொதப்பல், அவசரதுனால நடக்குது, ஆனா, 395 runs targetடா வெக்குறாங்க. எங்க ஜெயிக்க போறாங்கன்னு நம்பிக்கை. 

கடைசி நாள் வரைக்கும், Mehedy Hasanனோட test match'அ தான் இருந்திருக்கு. அதுக்கு ஒரு சிறந்த example, அவரோட century மற்றும் ரெண்டு innings சேர்த்து 8 wickets எடுத்த விதம். ஆனா, கடைசி நாள்ல, Kyle Mayers'ஓட கதகளி ஆட்டம் தான். 

ODI Series நடக்கும்போதே சொல்லிட்டு இருந்தேன், இவரோட ஆட்டம் technicalலா ரொம்ப நல்லா இருக்கு, நிச்சயமா பின்னாடி நெறய வாய்ப்பு இவரை தேடி வரும்னு. அந்த ஒரு நம்பிக்கையை, ஒரு மில்லி கூட குறைக்காம இப்போ வரைக்கு  அதை நிரைவேத்திட்டு இருக்காரு. 

Last Day, 4th Innings Chase, Left Hander's heroic இதை விட ஒரு love story எங்கேயுமே அமையாது. முதல்ல, 2019 Ashesல Stokes சம்பவம். அதுக்கு அடுத்து அதே வருஷத்துல, South Africaவுக்கு எதிரா, Kusal Peraraவோட பொறுப்பான ஆட்டம். அதுக்கு அடுத்து 2021ல, Australiaவுக்கு எதிரே Australiaவுல, அவங்களோட கோட்டையா கருதப்படுற Gabbaல, Rishab Pantடோட வதம், அங்க இருந்து நேர Bangladeshல இப்போ Mayers'ஓட கதகளி ஆட்டம். 

395 runs'அ 15 overs மிச்சம் வெச்சு chase பண்றங்க West Indies team. அதுக்கு, Mayers'ஓட ஆட்டம் தான் முக்கியமான காரணம். அது கூடவே, Nkrummah Bonnerரோட pressure absorption. இது இல்லாம போராட்டம். "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"ன்னு உலகத்துக்கு ஒரு வாட்டி, சொல்லாம சொல்லியிருக்காங்க !

     

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?