ஐபிஎல் 2020 நிச்சயம் நடைபெறும் !

நாம் அனைவரும் அறிந்திருப்போம், கொரோனா எனும் கொடிய நோயின் பாசக்கயிற்றில் , இவ்வுலகமே மாட்டிகொண்டிருக்கிறது. இந்நோயின் காரணத்தினால், உலகில் ஏராளாமானோர் உயிர் மாண்டனர். இதன் காரணத்தினால், பல விளையாட்டு தொடர்களை, தாமதப்படுத்தி வைத்துள்ளனர். அதில், ஓர் தொடர் தான், இந்திய நாட்டை சேர்ந்த, ஐபிஎல் கிரிக்கெட் தொடர். ஏப்ரல் - மே மாத காலகட்டத்தில், இத்தொடர் நடைபெறும் என அனைவரும் நம்பி, எதிர்பார்த்து, அதற்கு ஏற்ப அட்டவணைகளை தயார் செய்து, இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. அனைவரும் காத்திக்கொண்டிருக்க, ஒரு வார காலமே இருக்கும் நிலையில், திடீரென்று கொரோனா'வின் வீரியம் அதிகரித்தது. அதன் மீது கொண்ட அச்சத்திலும், அதன் செயல்பாடுகளையும் கண்டு, மத்திய அரசு ஓர் முடிவெடுக்கின்றது. இந்திய நாட்டை வீட்டுக்குள் தற்காலிகமாய் முடக்கி விடலாம் என்று அறிவிப்பு வெளியிட, ஐபிஎல் தொடரை தள்ளிவைக்கின்றது. 3 மாத காலத்திற்கு பிறகு, உலகில் கிரிக்கெட் மீண்டு எழ, ஐபிஎல் பற்றிய பேச்சுகள் பரவியது. பலர், இவ்வாண்டின் ஐபிஎல் தொடர் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது என்றும், இதற்கு அடுத்த ஆண்டிலேயே இத்தொடர் நடைபெறும் என்றும் ம...