ஹர்பஜன், சென்னை அணி மற்றும் சஞ்சய் மஞ்சரேக்கர்
2 வாரங்களில் துவக்கம் பெறவுள்ள IPL தொடரின் அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இத்தொடரில் மேலும் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் உள்ள நுணுக்கங்களை, இப்பதிவில் நாம் ஆராயவுள்ளோம்.
இவ்வாண்டின் IPL தொடரின் அட்டவணை, இரண்டு வார காலம் இருக்கும் நிலையில், இன்றும் வெளியிடப்படாமல் நிலைத்துக்கொண்டிருக்க, அணிகளுக்கு மிகவும் அருகில் உள்ள நபர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், IPL தொடரின் அட்டவணை, அனைத்து அணிகளுக்கும், தனிப்பட்ட வகையில், சென்றடைந்துள்ளது. இன்னும், 2 நாட்களுக்குள், அதிகாரபூர்வமாக வெளியிடப்படும், என்றும் மேலும் சில வதந்திகள் அடிப்படையில், முதல் போட்டி மும்பை அணிக்கும் சென்னை அணிக்கும் இடையிலான போட்டியாக அமைந்திருக்கும், எனவும் காணப்படுகிறது. அட்டவணை இவ்வாறு உள்ள கேள்விகளுக்கு பதில் கிடைக்கும். விரைவில், வெளியிடப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
IPL அட்டவணை வெளியிடப் படாமல் இருக்கும் தருணத்தில், வேறு சில பணிகளை BCCI, நிறைவு செய்துள்ளது. இவ்வாண்டில் நடக்கவிருக்கும் IPL தொடரின் வர்ணனையாளர்களை தேர்வு செய்துள்ளார்கள். ஆனால், அவற்றுள் சஞ்சய் மஞ்சரேக்கரின் பெயர் காணப்படவில்லை. இதற்கு முன்பாகவே, சஞ்சய் மஞ்சரேக்கர் கூறிய தகாத கருத்துக்களின் காரணத்தினால், வர்ணனையிலிருந்து பணிநீக்கம் செய்தது, BCCI. சஞ்சய் மஞ்சரேக்கர், அதற்கு மன்னிப்பு கேட்கும்பொருட்டு, BCCI நிறுவனத்துக்கு, கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். ஆயினும், அவரை வர்ணனை பணியில் மீண்டும் சேர்க்கவில்லை. மேலும், சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்துக்களைப்பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமெனில், கிரிக்கெட் வர்ணனை செய்திகள் , கோடிடப்பட்ட இந்த link'ஐ click செய்யவும்.
இறுதியாக, கிடைத்த தகவல் யாதெனில், சுரேஷ் ரெய்னா'வை தொடர்ந்து, சென்னை அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான, ஹர்பஜன் சிங் அவர்கள், இவ்வாண்டின் IPL தொடரிலிருந்து விலகல். தனிப்பட்ட காரணங்களால், விலகிக்கொள்கிறார்ம் திரு, ஹர்பஜன் சிங். இதற்கு முன்பாகவே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில், இவர் பங்குபெறவில்லை. 2 வாரங்கள் ஆயினும், ஐக்கிய அரபு நாடுகளை, இவர் வந்தடையவில்லை, இவரின் பங்கேற்பைக் குறித்து பல வதந்திகள் வெளிவர, தற்போது அதிகாரபூர்வமாக, இவரின் விலகலை தெரிவித்துள்ளார். சென்னை அணியை பொறுத்த வரை, இது மேலும் ஓர் இடியாகும். பலர் கூறுவர், சென்னை அணியில் தான் பல சுழற்பந்து வீச்சர்கள் உள்ளார்களே, பின்னர் ஏன் கவலைக்கொள்ள வேண்டும் ? சுழற்பந்து வீச்சாளர்களில் பல வகை உண்டு. அவற்றுள், முன்னணி Off Spin Bowler, இவர் ஒருவர் தான். மீதம் உள்ளோர் Leg Spin மற்றும் left arm spin Bowler'களாகும். மேலும், அவருடைய சர்வதேச மற்றும் IPL கிரிக்கெட் அனுபவத்தை ஈடு செய்தல் என்பது கடினச்செயலாகும். ஆயினும், அவருக்கு மாற்றாக ஒருவரை நியமிக்க வேண்டும். ஏலத்தில் விலைபோகாத வீரர்களின் பட்டியலை பார்வையிட்டால், அவற்றுள் நான்கு வீரர்களின் பெயரே பூதாகரமாக உருவமெடுக்கின்றது. முதலில் யூசுஃப் பதான். சர்வதேச அளவில் புகழ்வாய்ந்த வீரர் மற்றும் ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளில் விளையாடிய அனுபவமும் மிகுந்த அளவில் காணப்படுகின்றது. பேட்டிங்கிலும் சரி பந்துவீச்சில் சரி, தனது பங்களிப்பை நிறைவு செய்யும் வீரர். இருப்பினும், இவரிடம் உள்ள ஓர் பிரச்சனை, சென்ற இரு தொடர்களில் அவரின் ஆட்டம், நினைத்தவாறுஅமையவில்லை . மற்றும், ஹர்பஜன் சிங் அளவிற்கு பந்துவீச இயலுமா என்பது ஓர் கேள்வியாக நிற்கிறது. இவரைக்கடந்து, இளம் வீரர்களான, ஹனுமா விஹாரி மற்றும் ஜலஜ் சக்சேனா. இவர்கள் இருவரும் உள்நாட்டு போட்டிகளில் பல போட்டிகளை விளையாடியுள்ளார்கள். ஹனுமா விஹாரி, இந்திய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியினுள், இடம்பெற்ற விளையாடிவருகின்றார். இருவருமே, Off Spin Bowlingஐ பிசிறில்லாமல் நிறைவு செய்ய இயலும். பேட்டிங்கிலும், தகுந்த பங்களிப்பை வெளிக்காட்ட இயலும். இவர்கள், நிச்சயம் சென்னை அணியின், பார்வையில் இருப்பர். இவர்களைக் கடந்து, தனிப்பட்ட முறையில், என் பார்வை, தமிழ்நாட்டை சேர்ந்த, இளம் வீரரான, திரு ஷாரூக்கின் மீதே கவனம் உள்ளது. மிகவும் அதிரடி ஆட்டக்காரராக வலம்வரும் இவர், தகுந்த நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் சக்தியும் நிறைந்து காணப்படுகின்றது. தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள், அனைவரும் சுழற்பந்துகளை கையாளுவதில் வள்ளலாக இருப்பர். சென்னை அணிக்கும், அடுத்து நடைபெறவுள்ள மெகா ஏலத்தில், இளம் அணியை தயார் செய்யவேண்டும் என்கிற கட்டாயமும் நிறைந்து இருக்கும். அதற்கு, முன்னோடியாக, இந்த இளம் சிறுவனை வழிநடத்துதல் என்பது, பிற்காலத்தில் மிகவும் துணைபுரியும்.
மேலும், ஓர் இன்ப செய்தி யாதெனில், சென்னை அணி தங்களின் பயிற்சியை துவங்கியுள்ளார்கள். கொரோனாவின் பாதிப்பிலிருந்து ஓர் வார காலத்தில் வெற்றிகரமாய் வெளிவந்து, பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார்கள்.
எனவே காத்திருப்போம் !! அட்டவணை நிச்சயம் வெளியிடப்படும் !!.

Comments
Post a Comment