மேலும் IPL - 2020
Dream 11 IPL தொடர், செப்டம்பர் 19ம் துவங்கவிருக்கும் நிலையில், மேலும் தகவல்கள் வெளிவந்துள்ளது.


!. சுரேஷ் ரெய்னா'விற்கும், சென்னை அணியின் Owner'ஆன திரு. N. ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு நிலவிக்கொண்டிருந்த வாக்குவாதத்திற்கு, முற்றுப்புள்ளி வைக்குமாறு ரெய்னா அவர்கள் வெளியிட்ட அறிக்கை.
!. IPL உரிமம் குறித்த தகவல்கள், விரைவாக வெளியிடப்பட்டுள்ளது
!. டெல்லி அணியை தொடர்ந்து, பெங்களூரு அணியும் ஓர் மாற்று வீரரை நியமித்துள்ளார்கள்
!. IPL அணிகளை பற்றிய தகவல்கள்
1. சமீபத்தில், சுரேஷ் ரெய்னா அவர்களுக்கும், சென்னை அணியின் நிர்வாகத்துக்கும் இடையிலான தகராறு பற்றி அனைவரும் அறிந்ததே. அறியாதோர், இதற்கு முன் நான் வெளியிட்ட பதிவினை சென்று காணலாம்.
அவ்வாறு நிலவிக்கொண்டிருந்த இன்னல்களுக்கு, முற்றுப்புள்ளி வைக்குமாறு, திரு. சுரேஷ் ரெய்னா அவர்கள், ஓர் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், " திரு. ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும், எனக்கும் உள்ள உறவு, ஓர் தந்தை மகனுக்கு இணையான உறவாகும். அவர் என்னை திட்டியதும், ஓர் தந்தை மகனை திட்டும் பொருட்டு தான் அமைந்து இருந்தது. சென்னை அணியின் சார்பாக, நான் மேலும் 4-5 ஆண்டுகளாவது விளையாட ஆசைப்படுகிறேன். எனக்கும் தோனி அவர்களுக்கும் எவ்வித வாக்குவாதமும் ஏற்பட வில்லை. நான், இவ்வாண்டின் IPL தொடருக்கு மீண்டும் திரும்பலாம்" என்றே கூற, சென்னை அணியின் ரசிகர்களுக்கு, கடும் சோகங்களுக்கு பின் இன்புற்றுக்கொள்ளுமாறு அமைந்திருந்தது. ஆதலால், ஓர் குடும்பத்தில் உள்ள இன்னலை, சமூக பிரச்சனையாக மாற்ற எண்ணினால், அதன் விளைவு ஏமாற்றமே. ஏனெனில், குடும்பத்துல ஆயிரம் இன்னல்கள் இருக்கும், அதை வெளியாள் ஒருவன் சரி செய்ய இயலாது.
2. CRED நிறுவனம், இவ்வாண்டின் IPL உரிமத்தை கைப்பற்றியது. அதாகப்பட்டது, dream 11 நிறுவனம், இவ்வாண்டின் டைட்டில் உரிமத்தை கைப்பற்ற, CRED நிறுவனம், அதிகார உரிமத்தை கைப்பற்றியது. இதன் ஒப்பந்தம், மூன்று ஆண்டுகளுக்கு தொடரும். 2022ம் ஆண்டு வரை, CRED நிறுவனமே, IPL தொடரின், அதிகார உரிமமாக இயங்கும். மேலும் கிடைத்த ஓர் செய்தி யாதெனில், இவ்வாண்டின் IPL தொடர் முடிவடைந்த பின், மேலும் 2 ஆண்டுகளுக்கு, Unacademy நிறுவனமே, IPL தொடரின், டைட்டில் உரிமத்தை பெற்றுக்கொள்ளும். ஆதலால், Dream 11 IPL, 2021ம் ஆண்டிலிருந்து Unacademy IPL என கூறப்படும்.
3. ஒரு வாரத்துக்கு முன், டெல்லி அணியினுள் உள்ள வீரரான வோக்ஸ் அவர்களுக்கு மாற்றாக அன்றிச் நோர்ட்ஜெ எனும் வீரரை நியமித்தனர். இதனைத்தொடர்ந்து, தற்போது பெங்களூரு அணியை சேர்ந்த கேன் ரிச்சர்ட்சன் அவர்கள், தனக்கு பிறக்கவுள்ள முதற் பிள்ளையை காண்பதற்காக, இவ்வாண்டின் IPL தொடரிலிருந்து வெளியேறுகின்றார். அவருக்கு மாற்றாக, அவருடைய நாட்டை சேர்ந்த ஆடம் ஜாம்பா, எனும் சுழற்பந்து வீச்சாளரை நியமித்துள்ளார்கள். பெங்களூரு அணிக்கு, 8ஆம் சுழற்பந்து வீச்சாளராக, ஜாம்பா அவர்கள் களமிறங்கவுள்ளார்.
4. சென்னை அணியை தவிர்த்து, அனைத்து அணிகளும் தங்களின் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அணியை பொறுத்த வரை, அனைத்து வீரர்களும் இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்டனர். இவற்றில், அனைவரும் Negative, என்றே செய்திகள் வெளிவந்துள்ளது. மூன்றாம், பரிசோதனையை வெற்றிகரமாக கடந்துவிட்டார்கள் என்றால், தங்களின் பயிற்சியை வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து மேற்கொள்ளலாம் என்கிற செய்திகள் வெளிவந்துள்ளது. ஆயினும், மற்ற அணிகள், ஒரு வாரம் முன்னிலையில், தங்களின் பயிற்சிகளை நடைமுறை செய்து வருகின்றனர். பரிசோதனையின் தேர்ச்சியை பொறுத்து தான், எவ்வித தகவலும் வெளியிடப்படும். அது, இவ்வாண்டின் IPL தொடர் குறித்த அட்டவணையாக இருப்பினும் சரி.
ஆகையால், செப்டம்பர் மாதம், சென்னை அணிக்கு மிகவும் இன்பம் அளிக்கும் மாதமாக வருகை தந்துள்ளது. அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டால், மீதம் உள்ள பணிகள் வெகு விரைவில் நிறைவு செய்யப்படும்.
Comments
Post a Comment