Yo-Yo test என்றால் என்ன ?
பங்களாதேஷ் சர்வதேச கிரிக்கெட் அணியின், உடல் செயல்திறன் தலைவரான, Nick Lee அவர்கள், தங்களுடைய கிரிக்கெட் அணிக்கு, Yo-yo test எனும் உடற்தகுதி சோதனை தேர்வினை,கொண்டு வந்துள்ளார். Yo-yo test என்றால் என்ன ? எனும் கேள்வி நம் மனதில் எழும்பியிருக்கும். அதை விளக்குவதற்காகவே, இப்பதிவை நான் எழுதுகிறேன்.
Yo-yo test என்பது, ஓர் விளையாட்டு வீரனின் உடற்தகுதி, அந்த விளையாட்டு ஏதுவாக, தற்போது உள்ளதா என்பதை சோதனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட முறையே ஆகும். இந்த Yo-yo test முறையை, 2008ம் ஆண்டில், Jens Bangbo எனும் Danish Physiologistடினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
முதன் முதலில், கழல்பந்து வீரர்களின் உதற்தகுதியை சோதனை செய்ய பயன்படுத்தினாலும், நாட்கள் நகர நகர, இதை மற்ற விளையாட்டுகளிலும் பயன்படுத்த துவங்கியுள்ளார்கள். கிரிக்கெட்டை பொறுத்தவரை, உலகில் உள்ள அனைத்து, Test Cricket விளையாடும் நாடுகள் இதை, நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளார்கள்.
இதன் சோதனை எவ்வாறு இருக்கும். மூன்று Coneகள் வைக்கப்பட்டு A, B மற்றும் C என்று பிரிக்கப்பட்டிருக்கும். அதில், A Coneனுக்கும் B Coneனுக்கும் இடையே 5 மீட்டர் இடைவெளி அமைக்கப்பட்டிருக்கும். B Coneனுக்கும் C Coneனுக்கும் இடையே 20 மீட்டர் இடைவெளி அமைக்கப்பட்டிருக்கும்.
Aவுக்கும் Bக்கும் இடையே உள்ள இடைவெளியை, Recovery space என்று அழைப்பர். அதுவே, Bக்கும் Cக்கும் இடையே அமைக்கப்பட்ட இடைவெளியை Sprinting Space என்று அழைப்பர். ஒரு வீரன், இந்த சோதனையை மேற்கொள்கிறான் என்றால், முதலில் அவன் B Coneலிருந்து துவங்குவான். ஓர் Beep ஒலி கேட்கும். அந்த Beep ஒலி வெளிவந்தவுடன், அந்த வீரன் B Coneலிருந்த்து C Coneவரை மிக வேகமாய் ஓடி, C Coneனை தொட்டுவிட்டு, மீண்டும் B Coneனை மிகவும் வேகமாக வந்தடையவேண்டும். முதல் Beep ஒலியிருந்து இரண்டாம் Beep ஒளிக்குள், Bல் இருந்து C மீண்டும் Cல் இருந்து B என ஓடி வரவேண்டும். இந்த இரண்டு Beepக்கும் உண்டான இடைவெளி நேரம், ஒவ்வொரு ஓட்டத்துக்கும் சிறிது சிறிதாக குறையும். B Coneனை வந்தடைந்தவுடன், அங்கிருந்து A Coneனுக்கு, அவன் மெதுவாக நடக்கவேண்டும். அந்த ஒரு இடைவெளி தான், ஒரு வீரனுக்கு ஓய்வெடுக்கும் இடைவெளி என்று கூறுவார். 10 வினாடிக்குள், மீண்டும் B Coneனை வந்தடையவேண்டும்.
இவ்வாறு, ஒரு முறை Bலிருந்து Cக்கும் மீண்டும் Cலிருந்து Bக்கும் ஓடி வருவதை, ஒரு Shuttle என்றும் கூறுவர். நேரத்தை குறைப்பதோடு மட்டும் அல்லாமல், செய்முறை அதிகரிக்க அதிகரிக்க, Shuttleலின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதாவது, இரண்டு Beep சத்தங்களின் இடைவெளிக்குள், முதலில் ஒரு முறை Bல் இருந்து Cக்கும், Cலிருந்து Bக்கும் ஓடிவரவேண்டும், பின்னர் அந்த செய்முறை இரண்டாகவும் மூன்றாகவும் அதிகரிக்க. 14ம் முறைக்கு மேல், 2 Beepப்புக்குள், 8 முறை இரண்டு Coneகளுக்கும் இடையே ஓட வேண்டும்.
இந்த செய்முறையை தான், பல நாடுகளுக்கு பின், பங்களாதேஷ்ஷும் கொண்டு வந்துள்ளனர். ஒரு வீரனின், உடற்பயிற்ச்சி, எவ்வித விளையாட்டாக இருப்பினும், அது அவனுக்கு கைகொடுக்கும். கிரிக்கெட்டில், பல வித போட்டிகள் உள்ளது. ஒவ்வொன்றுக்கும், ஒவ்வொரு முறை. அதற்கு ஏற்றவாறு, நாம் உடற்கட்டு அமைந்தால் மட்டுமே, பல காலங்களுக்கு நம்மால், எவ்வித இன்னல்களும் இன்றி விளையாட முடியும். ஆகையால், உடற்தகுதி எனும் விஷயம், ஒரு வீரனை கடந்து ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
Comments
Post a Comment