இந்திய கிரிக்கெட் அணியின் நெருக்கடியான அட்டவணை - 2021

பரவலாக, சில உண்மைகள் காற்றில் மிதந்துக்கொண்டு இருக்கிறது. அவ்வாறு உள்ள உண்மைகள், 2021ம் ஆண்டில் இந்திய அணிக்கு அமைக்கப்பட்ட Schedule பற்றியும் இருக்கலாம். இவையனைத்திற்கும், காரணம் யாதெனில் என நீங்கள் கேள்வி எழுப்பினால், அதற்கு ஒரே விடை, Corona நோயினால் ஏற்பட்ட முடக்கம் தான். " நீங்கள் கூறும் சொற்கள் ஏதும் விளங்கவில்லை, சற்று புரியும்வாறு கூறுங்களேன் ", என பார்வையாளர்களின் மனக்குமுறலை என்னால் புரிந்துகொள்ள முடியுது. நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், இனி வரும் பக்கங்களில், ஒரு வரி விடாமல் படித்துக்கொண்டே வாருங்கள். இவ்வாண்டு, கொரோனா நோயின் பாதிப்பால், பல போட்டிகள் தடைபட்டது. பல சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டது. அதில் ஒன்றே, இவ்வாண்டின் நடக்கவிருந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடர். இவ்வாறு தடைபட்ட போட்டிகளையும், தொடர்களையும், பின் வரும் ஆண்டுகளில் நடைபெரும்வாறு அட்டவணை அமைக்க வேண்டும். இவ்வாறு, அமைக்கப்பட்ட அட்டவணையின் காரணத்தினால், எவ்வித ஓய்வுமின்றி, தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்களிலும் பங்குபெறும் அளவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலை, அனைத...