Eoin Morgan - KKRன் புதிய Captain
இன்று மதியம் 2 மணியளவில், KKR அணியின் twitter பக்கத்தில் ஓர் பதிவு வெளியானது. அந்த பதிவில், தற்போதைய Captain'ஆன திரு. தினேஷ் கார்த்திக் அவர்கள், தனது தலைமை பொறுப்பை, England சர்வதேச ஒரு நாள் மட்டும் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவரான, Eoin Morganனிடம் பதவியை ஒப்படைத்துள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில், KKR twitter admin அவர்கள் குறிப்பிட்டது, இருவருமே களத்தில் நல்ல புரிதலுடன் பணியாற்றியுள்ளார்கள். இம்முடிவு சரியானதாக பார்க்கப்படுகிறது. ஏன், இந்த திடீர் முடிவு ? இதற்கான விளக்கத்தை நாம் இப்பதிவில் பார்ப்போம்.
சென்ற ஆண்டிலிருந்து, தலைமை அழுத்தம், தினேஷ் கார்த்திக் அவர்களை நன்கு பாதித்துள்ளது. பல வீரர்களுடன், வாக்குவாதம் ஏற்பட்ட நிகழ்வுகளை நாம் கண்டுள்
ளோம். இருப்பினும், இவர்கள் வழிநடத்தும் பொருட்டு, அனுபவமுள்ள வீரர் அப்போது எவரும் இல்லை. இவ்வாண்டின், IPL ஏலத்தில், Eoin Morgan அவர்களை, கொக்கியிட்டு வாங்கியது KKR. ஆனாலும், தினேஷ் கார்த்திக் அவர்களின் வெற்றி சதவீதம் நன்றாக இருக்கும் காரணத்தினால், இவரே மீண்டும் அணியின் தலைவராக பணியபுரிவார் என தகவல் வெளிவந்துள்ளது. இவ்வாண்டின், IPL தொடரிலும் நன்கு பணியாற்றினார். ஆனாலும் ஏன் ??
ளோம். இருப்பினும், இவர்கள் வழிநடத்தும் பொருட்டு, அனுபவமுள்ள வீரர் அப்போது எவரும் இல்லை. இவ்வாண்டின், IPL ஏலத்தில், Eoin Morgan அவர்களை, கொக்கியிட்டு வாங்கியது KKR. ஆனாலும், தினேஷ் கார்த்திக் அவர்களின் வெற்றி சதவீதம் நன்றாக இருக்கும் காரணத்தினால், இவரே மீண்டும் அணியின் தலைவராக பணியபுரிவார் என தகவல் வெளிவந்துள்ளது. இவ்வாண்டின், IPL தொடரிலும் நன்கு பணியாற்றினார். ஆனாலும் ஏன் ??
அணியினுள், சர்வதேச கிரிக்கெட் அணியின் தலைவர் இருக்கும்போது, அதுவும் உலகக்கோப்பையை கைப்பற்றிய ஒரு Captain இருக்கும் தருணத்தில், தான் அதையும் கடந்து நன்கு செயல்பட வேண்டும் என்கிற அழுத்தம் முன்பை விட அதிகம் இருக்கும். அந்த அழுத்தத்தின் காரணத்தினால், தனது battingகில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனோட இனைந்து, களத்தில் பல முறை, Eoin Morgan அவர்கள் பந்துவீச்சாளர்களிடம் உரையாற்றுவது, தினேஷ் கார்த்திக் அவர்கள் குழப்பமுற்று காணும் தருணங்களில், அணியின் பந்துவீச்சாளர்களை வழிநடத்துவது என, தனது அனுபவத்தை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தன்னை சுற்றி பரவியிருக்கும் அழுத்தமானது, இம்முடிவை தேர்வு செய்ய முற்பட்டுள்ளது.
என்னை பொறுத்தவரை, இம்முடிவில் எனக்கு சிறிதும் எதிர்மறையான கருத்துக்கள் இல்லை. இதற்கு பின், தினேஷ் கார்த்திக் அவர்கள் தனது Wicket - Keepingகிலும், Battingகிலும் நன்கு செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எதிரணிகளுக்கு ஓர் எச்சரிக்கை ! Morgan எனும் ஆளுமை, முழு நேர தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இங்கிருந்து, எதிரணிகளுக்கு வெற்றிபெறுவது என்பது உயிர் சென்று வரும் காரியமாக அமையும். அவ்வாறு, சிறப்பான Captain ஆவார்.
இன்றிரவு, மும்பை அணிக்கு எதிரே கொல்கத்தா அணி மோதவுள்ளது. இதுவே, IPL தொடரில், Morgan, தலைவனாக வழிநடத்தும் முதல் போட்டியாகும் !!
Comments
Post a Comment