AFG vs IRE - ODI Review
Afghanistanனுக்கும் Irelandதுக்கும் இடையில நடந்து முடிஞ்ச ODI Seriesல, மூணு match'உமே Afghanistan ஜெயிக்குறாங்க. ஆனா, இதுல எந்த victoryயும் நெனச்ச அளவுக்கு easyயா கிடைக்கல. இன்னொரு பக்கம் இருக்குற Ireland teamமும் சளச்சவங்க இல்லன்னு ஒவ்வொரு முறையும் prove பண்ணிட்டே இருந்தாங்க. ஆனா, நடந்த சில விஷயம், Afghanistan teamமுக்கு சாதகமா அமைஞ்சுது. அது என்ன சம்பவம்ன்னு இந்த Review Postல நாம பாக்க போறோம்.
மூணு Match'உமே அபு தாபி'ல நடக்குது. அதுல முதல் match பொறுத்த வரைக்கும், Afghanistan toss ஜெயிச்சு batting choose பன்றாங்க. Rahmanullah Gurbaz, தன்னோட debut matchல, தரமான century போடுறாரு. இவர் தான் First Afghanistan cricketer to score a ton on his debut. ரொம்பவே attackingகான game. Short ball போட்டாலே, pull shotடும் hook shotடும் தரமா வெளில வருது. ஆனா, இது புரியாம Ireland bowlers, short balls போட்டுட்டே இருக்காங்க, இவரும் சளைக்காம அடிச்சிகிட்டே இருக்காரு. இவரும், Javed Ahmadடியும் சேர்ந்து 120 runs, opening partnershipபா போடுறாங்க. அங்க இருந்து நிச்சயமா பெரிய score வரும்ன்னு எதிர்பார்க்கும்போது, Andrew McBrine had other ideas. 5 wicket haul எடுக்குறாரு. எல்லா Afghanistan batsmanனும், leg sideல shot ஆட try பண்ணி, off spin விளையாட தெரியாம தான் out ஆகுறாங்க. இவரோட spell, கிட்டத்தட்ட Afghanistan teamம 220க்குள்ள தடுத்து நிறுத்தியிருக்கனும், ஆனா கடைசில Rashid Khanனுக்கு 3-4 catches விட்டது, பிரிச்சு மேஞ்சுட்டாரு. ஒரு Quick fire fifty அவருகிட்ட இருந்து, Afghanistan teamம 287/9ன்னு நல்ல scoreருக்கு கூட்டிட்டு போகுது.
அதுக்கு அடுத்து, திரும்ப Ireland battingக்கு வர்றாங்க. CPLல நல்லா bowl பண்ண Naveen Ul Haq, இங்கயும் set பண்ணி wickets'அ dismiss பண்ணுறாரு. Short mid wicket set பண்ணி, Andy Babirnieயும் மற்றும் Stump to stump lineல off cutter போட்டு Kevin O Brianநும் dismiss பண்ணுறாரு. அதுக்கு அடுத்து, Afghanistan போலவே இவங்களும் spinனுக்கு எதிர்க்க ரொம்ப கஷ்டம் பட்டாங்க. கூடவே regular intervalsல wickets இழந்தது, பின்னாடி என்னதான் Lorcan Tucker அடிச்சாலும், அவருக்கு துணையா ஒரு batsmanனும் இல்லாம, தத்தளிச்சு மூழ்கினது தான் மிச்சம். ஆமா, Lorcan Tucker ரொம்பவே நல்லா விளையாடிட்டு இருந்தாரு. அவருக்கு supportடும் பெருசா அமையல, Run rateடும் எகிற ஆரம்பிச்சுது. அந்த காரணத்துனால, 16 runs வித்தியாசத்துல Afghanistan team ஜெயிக்குறாங்க.
ரெண்டாவது ODI பொறுத்த வரைக்கும், Ireland toss win பண்ணி batting choose பன்றாங்க. Afghanistan'ஓட பக்கத்துல இருந்து பாக்கும்போது, On-fieldல ரெண்டு hero தான். ஒன்னு, Mujeeb Ur Rahman, இன்னொன்னு Naveen Ul Haq. முஜீப் பொறுத்த வரைக்கும், new ballல Ireland'ஓட top order line-upப கழட்டி எடுக்குறாரு. 20/2ன்னு முக்கிட்டு இருக்குற Ireland teamம, கொஞ்சம் கொஞ்சமா காப்பாத்தி கரை சேர்க்க பாக்குறாரு, Paul Stirling. அவரோட ஆட்டம், ரொம்ப casualலா இருந்துச்சு, but அதே நேரத்துல runs'உம் சரியா வந்துட்டு இருந்துச்சு. 11வது சதம் அடிக்குறாரு, அதுவும் கடைசி 5 inningsல இது இவரோட 3வது சதம். இவருக்கு துணையா, Curtis Campher, முக்கியமான 47 அடிக்குறாரு. இவங்க சேர்ந்து ஆடுன ஆட்டம், ஓரளவுக்கு teamம காப்பதினாலும், பின்னாடி சொதப்பல் நடக்குது. 210/3ல இருந்து 259/9ன்னு சரிஞ்சு விழுறாங்க, Ireland. அதுக்கு ஒரு முக்கிய காரணம், Naveen Ul Haq வீசுன cutters தான். ஒரு வேளை, இந்த மாதிரி சொதப்பல் நடக்காம இருந்திருந்தா, இன்னும் பெரிய score அடிச்சியிருக்கலாம், ஜெயிக்குறதுக்கான வாய்ப்பும் அதிகமா இருந்திருக்கும். ஆனா, இந்த collapse தான் இவங்களுக்கு மொத்த matchச்சையுமே மாத்தி விட்ருச்சு.
திரும்ப Afghanistan team battingக்கு வர்றாங்க. போன match மாதிரியே, இந்த matchலயும், aggressiveவா ஆரம்பிக்குறாரு Rahmanullah Gurbaz. வந்த மலை போன wicketட்டுனு இவரோட approach, நல்ல start கொடுத்தாலும், ரொம்ப நேரத்துக்கு நிலைச்சு நிக்கல. கூடவே, Javed Ahmadiயும் அவுட் ஆகுறாரு. ஆனா, அதுக்கு அடுத்து விளையாடுன Rahmat Shahவும் Hashmattullah Shahidiயும் கொடுத்த 184 runs partnership, மொத்த gameமையே மாத்துச்சு. Rahmat Shahவோட ஒவ்வொரு shot placementடும் அருமையா இருந்துச்சு. அவரை ஒரு எடத்துல கூட சிக்க வைக்க முடியாம தவிச்சது தான் மிச்சம். நல்ல சதம் அடிக்குறாரு. அது கூட, Hashmattulahவும் 82 runs அடிக்குறாரு. 5 overs மிச்சம் வெச்சு ஜெயிக்குறாங்க Afghanistan!
மூணாவது ODIய பொறுத்த வரைக்கும், Ireland team கையில இருந்த match'அ விட்டுட்டாங்கன்னு தான் சொல்லணும். இன்னும் தெளிவா சொல்லனும்னா கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டவே இல்ல. Toss ஜெயிச்ச Ireland team, முதல்ல fielding choose பன்றாங்க. Gareth Delanyய வெளில உக்கார வெச்சுட்டு Joshua Littleல உள்ள கொண்டு வர்றாங்க. அதே நேரத்துல, Kevin O Brienன வெளில வெச்சுட்டு James McCollumம கொண்டு வர்றாங்க. இந்த move தான் இவங்களுக்கு மொத்த matchஏ காலி பண்ணி விட்ருச்சு. Ireland teamமோட bowling ரொம்பவே அற்புதமா இருந்துச்சு. ஆரம்பத்துல அடிச்சு ஆட முயற்சி பண்ண ஒவ்வொருத்தரையும், plan பண்ணி dismiss பன்றாங்க. இடையில, Asghar Afghan கொஞ்சம் தாக்கு புடிச்சாலும், Ireland teamமோட fast bowlers எல்லாரும் ஊடுருவ ஆரம்பிச்சிட்டாங்க. 163/7ன்னு ஒரு நிலைமையில தவிச்சிட்டு இருக்கும்போது, Rashid Khan உள்ள வர்றாரு. ஒரு teamமூக்கு lower order batting எந்த அளவுக்கு முக்கியம்னு சொல்ல இந்த ஒரு innings போதும். இங்க இருந்து எல்லாரும் எதிர்பாராது வெறும் 200 தான். ஆனா, Rashid Khan அடிச்ச முக்கியமா 48, இவங்க teamம, 265/9ன்னு ஒரு fighting scoreருக்கு கொண்டு போயி நிறுத்துது. 100 runs difference, இது தான் ரெண்டாவது காரணமா, Ireland தோல்விக்கு அமையுது.
Ireland team உள்ள வர்றாங்க. என்ன தான் wickets விழுந்தாலும், அதை பத்தி துளிகூட கவலை படாம, அடிச்சு ஆடுறாரு Paul Stirling. Of Course, ரெண்டு வாட்டி, DRS referralல இருந்து தப்பிச்சாலும், அதையெல்லாம் தாண்டி, கொஞ்சம் கூட பயமே இல்லாம, ஒவ்வொரு bowlerரையும் attack பண்ணுறாரு. மறுபடியும், ஒரு சதம் இவருகிட்ட இருந்து பாக்க முடிஞ்சுது. ஆனா இன்னொரு endல இருந்து, நெனச்ச அளவுக்கு பெரிய support கிடைக்கல. எல்லாரும் 20-30 runs அடிச்சு, அதுக்கு மேல convert பண்ணாம அவுட் ஆகிட்டு தான் இருந்தாங்க. இருந்தும், Paul Stirling உள்ள இருந்த வரைக்கும், Irelandதுக்கு தான் ஆட்டம்ன்னு இருந்துச்சு. ஒரு batsman கம்மியா விளையாடுறது காரணமா, Paul Stirling அவுட் ஆனதுக்கு அப்புறம் காப்பாத்த ஆள் இல்லாம, கோட்டை விட்டுட்டு போவுறாங்க. ரொம்பவே, பரிதாபமான தோல்வி !
Comments
Post a Comment