ரமேஷ் பொவார் தான் மும்பையின் புதிய பயிற்சியாளர் !

சில நாட்களுக்கு முன்பு தான், மும்பை மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான அமித் பாக்னிஸ் அவர்கள், தன் பதவியை ராஜினாமா செய்கிறார். அவருக்கு அடுத்து யார் பயிற்சியாளர் என்கிற கேள்வி, அனைவரின் மனதில் இருந்தது. அதற்கான பதில் தான், தற்போது ரமேஷ் பொவார் அவர்களை, பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது.

இவ்வாண்டில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில், மும்பை அணி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. 5 போட்டிகளில், ஒன்றை மற்றும் வென்று மீதி நான்கில் தோல்வியை தழுவியது மும்பை அணி. வலுவான அணியாக திகழ்ந்தாலும், மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அமித் பாக்னிஸ் அவர்கள், தனது பதவியை ராஜினாமா செய்தார். 

தான் இழந்த மரியாதையும் நம்பிக்கையையும், மீண்டும் கைப்பிடிக்க வேண்டும். அதற்காக தற்போது, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான, ரமேஷ் பொவார் அவர்களை புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளார்கள்.

மும்பையில் பிறந்து வளர்ந்த ரமேஷ் பொவார் அவர்கள், 31 ஒரு நாள் போட்டிகளும், 2 டெஸ்ட் போட்டிகளும் விளையாடியுள்ளார். அதில், 34 விக்கெட்டுகள் ஒரு நாள் கிரிக்கெட்டிலும், 6 விக்கெட்டுகள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கைப்பற்றியுள்ளார். உடற்கட்டு சரியாக இல்லாததால், இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாட முடியாமல் போனது.

ஆயினும், இவர் இந்திய சர்வதேச மகளிரணியின் முன்னாள் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். ஆகையால், இங்கும் நிச்சயம் ஜொலிப்பார் என்கிற நம்பிக்கை, அனைவரின் மனத்திலும் உள்ளது.

இவருடைய முதல் பணியானது, இன்னும் ஒரு வாரத்திற்குள் நடைபெறவிருக்கும், விஜய் ஹசாரே தொடரில், மும்பை அணியை நன்றாக விளையாட வைக்கவேண்டும் என்பது தான். இதை பற்றி அவரிடம் கேட்டபோது, "என் மீது நம்பிக்கை வைத்த முன்பை கிரிக்கெட் சங்கத்துக்கும், மும்பை அணியின் வீரர்களுக்கு நான் மிகுந்த கடமைப்பட்டுள்ளேன். பழைய நிலைக்கு மும்பை அணியை நிச்சயம் கொண்டு வருவேன் " என அவரும் உறுதியளித்துள்ளார்.

D தளத்தில், மும்பை அணியும், டெல்லி, மகாராஷ்டிரா, ஹிமாச்சல் பிரதேஷ், ராஜஸ்தான் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய அணிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. விஜய் ஹசாரே தொடரும், சையத் முஷ்டாக் அலி தொடரை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. 

       

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt