குசல் பெரேரா எனும் " குட்டி ஜெயசூரியா"
எந்த துறையை எடுத்துக்கொண்டாலும், அதில் ஒரு மனிதன் இருப்பான். அவனுடைய எண்ணங்களும், செயல்பாடுகளும், அத்துறையில் உள்ள வேறு சிறப்பானவருடன் இணைத்து, பொருத்தி பேசப்படுவர். கிரிக்கெட்டில் நாம் பார்த்தால், விராட் கோலியை, அடுத்த டெண்டுல்கர் என்றும், புஜாரா'வை, அடுத்த டிராவிட் எனவும் கூறுவார். அவ்வாறு, குசல் பெரேரா, என்கிற கிரிக்கெட் வீரரை, இலங்கை அணியின், தலைசிறந்த கிரிக்கெட் வீரரான, சனத் ஜெயசூரியா'வுடன் இணைய பேசுவர். இவருடைய, ஆட்டத்தைக்கண்டு, குசல் பெரேரா தான், அடுத்த சனத் ஜயசூரிய என்றும் அழைப்பர். இதுவரை 7 ஆண்டு காலமாக தான், சர்வதேச கிரிக்கெட் அணியில், களமிறங்கியுள்ளார். ஆனால், இத்தருணத்திற்குள், குசல் பெரேரா அவர்கள், வாழ்வின், உயர்வு தாழ்வுகளை பார்த்துள்ளார். இடது கை துவக்க வீரராக களமிறக்கப்படும் இவர், அதிரடி என்கிற ஒரு சொல்லினை மட்டுமே தனது வேதவாக்காக ஏற்றுக்கொண்டு விளையாடியுள்ளார். கவர்ஸ் திசைகளில் தான் அடிக்கும், ஆக்ரோஷமான ஷாட்டுகளை கண்டு அனைவரும் சனத் ஜெயசூர்யாவுடன், ஒப்பிட்டு பேசுவர். 2019ம் ஆண்டில், தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக தான் அடித்த 153 ரன்களின் ஆட்டத்தை...