பங்களாதேஷின் அணி - BAN vs WI Series, 2021
வருகின்ற 20 தேதியன்று, பங்களாதேஷ் மற்றும் மேற்கு இந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளும், ஓர் கிரிக்கெட் தொடர், பங்களாதேஷில் மோதவுள்ளது. இத்தொடர், 20ம் தேதியன்று துவக்கம் பெற்று அடுத்த மாதம் 15ம் தேதியன்று நிறைவு பெரும். பங்களாதேஷ் நாட்டில் மீண்டும் கிரிக்கெட்டை அழைத்து வருதலைக்கண்டு, ஒரு புறம் மகிழ்வுற்றாலும், மறுபுறம் கொரோனா நோயின் மீதான அச்சம் பெருகிக்கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக, கொரோனாவின் இரண்டாம் அவதாரமானது, ஏவுகணை வேகத்தில் மக்களிடையே பரவிக்கொண்டிருக்கிறது.
பங்களாதேஷ் - மேற்கு இந்திய தீவுகள் ஆகிய இரு நாட்டவருக்கு இடையே தொடர் நடைபெறும் என்கிற செய்தி வெளியான சில நாட்களிலேயே, பங்களாதேஷ் நாட்டுக்கு மேற்கொள்ளவிருக்கும் மேற்கு இந்திய தீவுகளின் அணிவகுப்பு வெளியிடப்பட்டது. அவ்வாறு வெளியிடப்பட்ட அணிவகுப்பில், அணியின் முக்கிய வீரர்களாக கருதப்படும் பலர் பயணிக்கவில்லை என்கிற செய்தி பூதாகரமாக உருவெடுத்துள்ளது.
ஏன், முக்கியமான வீரர்கள் பயணம் மேற்கொள்ளவில்லை என்கிற கேள்வியை கேட்டவுடன், மேற்கு இந்திய தீவுகளின் கிரிக்கெட் வாரியமானது, " பரவி வரும் புதிய கொரோனா நோயின் மீது உண்டான பயத்தின் காரணத்தினால், பயணம் மேற்கொள்ளவில்லை என்றும், இவ்வாறு உள்ள கடும் சூழ்நிலையில், சக வீரர்களின் விருப்பம் மிகவும் முக்கியம் " என தெரிவித்தனர்.
ஒரு நாள் கிரிக்கெட் தொடர் - Tamim Iqbal, Shakib Al Hasan, Najmul Hossain Shanto, Mushfiqur Rahim, Md Mithun, Litton Das, Md Mahmud Ullah, Afif Hossain Dhrubo, Musaddek Hossain Saikat, Soumya Sarkar, Yasir Ali Chowdhury, Naim Sheikh, Taskin Ahmed, Mohammad Al Amin Hossain, Md. Shoriful Islam, Hasan Mahmud, Saif Uddin, Mustafizur Rahman, Mehidy Hassan Miraz, Taijul Islam, Nasum Ahmed, Mohammad Parvez Hossain Emon, Mahadi Hasan, Rubel Hossain.
Preliminary squad for Test series: Momimul Haque Showrab, Tamim Iqbal Khan, Shakib Al Hasan, Najmul Hossain Shanto, Mushfiqur Rahim, Md Mithun, Litton Kumer Das, Yasir Ali Chowdhury, Mohammed Saif Hasan, Abu Jayed Chowdhury Rahi, Taskin Ahmed, Syed Khaled Ahmed, Hasan Mahmud, Mustafizur Rahman, Mehidy Hassan Miraz, Taijul Islam, Quazi Nurul Hasan Sohan, Shadman Islam, Nayeem Hasan, Ebadot Hossain Chowdhury.
Comments
Post a Comment