இனவாத ( Racism ) சம்பவம் - 2020/21
இப்போ சமீபத்துல, இந்தியாக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில test series நடக்குது. இந்த test seriesல இது வரைக்கும் 2 test matches நடந்திருக்கு, அதுல ஆஸ்திரேலியா 1 match'உம் இந்தியா ஒரு match'உம் ஜெயிச்சிருக்காங்க. இப்போ 3வது test matchல நாலு நாள் முடிஞ்சிருக்கு. இந்த நெலமையில, Australia'வ சேர்ந்த சில fans, Indian cricketers'அ உருவத்தை வெச்சு அசிங்கப்படுத்தினாங்க. குறிப்பா, அவங்களோட நிறத்தை வெச்சு கேலி பண்ணியிருக்காங்க. இந்த சம்பவத்தோட முழு விவரத்தையும், இந்த blogல நாம பாக்கலாம்.
நேத்து, மூணாவது நாள், test match நடந்து முடிஞ்சா உடனே, Siraj மற்றும் Bumrah சேர்ந்து, match umpires கிட்ட, ஒரு particular group எங்களோட உருவத்தை வெச்சு கேலி செய்யுறாங்கன்னு சொல்லி complaint பண்ணியிருக்காங்க. ஆட்டத்தோட போக்கு திசை மாறக்கூடாதுன்னு, matchக்கு நடுவுல எந்த ஒரு பிரச்சனையும் செய்யாம, முடிஞ்ச உடனே complaint பண்ணியிருக்காங்க. இந்த ஒரு சம்பவத்தை investigate பண்ணுறதுக்கு குள்ளேயே, அந்த group கிளம்பி போயிட்டாங்க.
அதுக்கு அடுத்து, இன்னிக்கி match நடந்துட்டு இருக்கும்போது, ஆஸ்திரேலியா team, 86 overs bat பண்ணியிருந்தாங்க. அப்போ, boundaryக்கு பக்கத்துல நின்னுட்டு இருந்த Siraj, தன்னோட positionல இருந்து நேர umpire கிட்ட போயி, complaint பண்ணினாரு. அதுக்கு, Indian team முழுக்க ஆதரவு தெரிவிச்சாங்க. Indian teamமோட stand in captainனான அஜிங்கியா ரஹானே, இந்த பிரச்சனையை தீக்குற வரைக்கும், விளையாட மாட்டோம்னு, சிராஜுக்காக support பண்ணாரு.
Australiaவோட Captainனான Tim Paineனும் இதுக்கு support பண்ணாரு. On fieldல இருந்த umpires, stadiumல இருந்த police கிட்ட inform பண்ணாங்க. Brewongle Standல இருந்த ஒரு 6 பேர், Indian cricketers ஆன Bumrah மற்றும் Siraj'ஜ, "Brown Dog"(பிரவுன் நாய்), "Big Monkey"(பெரிய குரங்கு)னு அவங்க உருவத்தை கேலி செய்யுற மாதிரி, பெயர் வெச்சு திரும்ப திரும்ப கூப்டுட்டு இருந்தாங்க.
Policemen, அந்த ஆறு பேரையும், groundட விட்டு வெளில கூப்டுட்டு போயி, police custodyல வெச்சிருக்காங்க. இந்த ஒரு சம்பவம் 2008ல, இதே border gavaskar trophyல நடந்த ஒரு issueவ ஞாபகம் படுத்துது.
2008ல, இதே மாதிரி Sydneyல, ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதுறாங்க. முதல் inningsல, ஆஸ்திரேலியா 453 runs அடிக்குறாங்க. அதுல, நெறய umpiring decision தப்பாவும், இந்தியாவுக்கு எதிராவும் அமைஞ்சுது. அந்த சூட்டோட தான், இந்திய battingக்கு வர்றாங்க. அப்போ, 116வது overல, ஹர்பஜன் சிங் அவர்கள் ஏதோ ஒரு வார்த்தையை சொல்லி, Symonds'அ திட்ட, அதுக்கு ஆஸ்திரேலியா team மொத்தமும் சேர்ந்து, ஹர்பஜன் சிங், Symonds'அ பாத்து குரங்குன்னு சொன்னதா சொல்லி பிரச்சனை பண்ணாங்க.
இந்த சம்பவம் விசாரணைக்கு வந்துச்சு, அப்போ ஹர்பஜன் சிங், Symonds'அ பார்த்து வார்த்தை விட்டது உண்மை தான் ஆனா Racism comments எதுவும் சொல்லலைன்னு Indian team, ரொம்பவே strongகா நிக்குறாங்க. விசாரணையில, இந்தியாவோட பக்கத்துல தான் நியாயம் இருக்குன்னு கண்டு புடிச்சாங்க. அதுக்கு அடுத்து, 12 வருஷம் கழிச்சு இப்படி ஒரு சம்பவம் தான், மனுஷங்களுக்குள்ள இன்னமும் அந்த ஒரு வேறுபாடு இருக்குன்னு, வெளிப்படையா காட்டுது.
Comments
Post a Comment