தென் ஆஃப்ரிக்கா - பாக்கிஸ்தான், 2021
இவ்வாண்டின் துவக்கத்தில், ஓர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க, பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறது, தென் ஆஃப்ரிக்கா கிரிக்கெட் அணி. 13 ஆண்டுகளுக்கு பிறகு, பாக்கிஸ்தான் நாட்டுக்கு மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்காக, பயணம் மேற்கொள்கிறது. பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த ரசிகர்களுக்கு, பல நாள் கழித்து, சர்வதேச கிரிக்கெட்டில் உயர் தரத்தில் உள்ள ஓர் அணி, தங்கள் நாட்டுக்கு பயணம் மேற்கொள்வது நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும். இத்தொடரை குறித்து மேலும் சில தகவல், தற்போது வெளியாகியுள்ளது.
இத்தொடரில் மொத்தம் 3 T20I போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கும். இத்தொடர் ஜனவரி மாதம், 26ம் தேதியன்று துவக்கம் பெற்று, பிப்ரவரி மாதம் 14ம் தேதியன்று நிறைவு பெரும். இரண்டு டெஸ்ட் போட்டிகள், ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடைபெற்றாலும், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஆகிய மூவற்றையும் லாஹூர் நகரில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இவற்றையும் நாம் சென்ற மாதமே பார்த்திருப்போம்.
தற்போது, பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும், தென் ஆஃப்ரிக்கா அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். இந்த பட்டியலில், பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியல், தென் ஆஃப்பிரிக்கா அணியானது பாகிஸ்தானில் விளையாடவிருக்கும் டெஸ்ட் போட்டிகளுக்காக எழுதப்பட்டுள்ளது.
தென் ஆஃப்பிரிக்காவின் டெஸ்ட் அணி - Quinton De Kock, Temba Bavuma, Aiden Markram, Faf Du Plessis, Dean Elgar, Kagiso Rabada, Dwaine Pretorius, Keshav Maharaj, Lungi Ngidi, Rassie Vander Dussen, Anrich Nortje, Wiaan Mulder, Lutho Sipamla, Beuran Hendricks, Kyle Verreynne, Sarel Erwee, Keegan Petersen, Tabraiz Shamsi, George Linde, Daryn Du Pavilion, Ottniel Baartman.
இலங்கை அணிக்கு எதிராக, சொந்த மாநில விளையாடும்போது, அமைக்கப்பட்ட அணி தான், இங்கும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களை தொடர்ந்து, வீரர்களான Keegan Petersen, Sarel Erwee, Daryn Du Pavilion மற்றும் Ottniel Baartman ஆகியோர் புது நியமனம். George Linde அவர்கள், limited overs கிரிக்கெட் போட்டிகளில், ஓர் முக்கிய all rounder வீரராக நிரூபித்துள்ளார். அங்கிருந்து test cricket என்பதை மற்றும் தனக்கு சாதகமாய் மாற்றியமைத்தால், அணியினுள் தனது நிலையானது உயர்வடையும்.
பாக்கிஸ்தான் அணி குறித்த அறிவிப்பைப்பற்றி, இனி வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம். ஆயினும், பாக்கிஸ்தான் கிரிக்கெட்டின் President அவர்கள் தெரிவித்தது, பயணம் மேற்கொண்டு களமிறங்கும் தென் ஆஃப்ரிக்கா அணிக்கு, மாநிலம் தர பாதுகாப்பு வழங்கப்படும் என்பது தான். நடைபெற்றால் தான், இனி வரும் காலங்களிலாவது, பாகிஸ்தானில் கிரிக்கெட் வளம் உயர்வடையும்.
Comments
Post a Comment