NZ vs PAK - இரண்டாவது Test, நான்காம் நாள் ( முடிவு )
நியூஸிலாந்து ரசிகனா நீங்க இருந்தீங்கன்னா, இப்போ உலகத்துல உங்கள விட ரொம்ப சந்தோசமான ஆளு வேற யாரும் இருக்க மாட்டாங்க. அப்படி பட்ட ஒரு ஆட்டத்தை express பண்ணாங்க New Zealand. நேத்து முடிக்கும்போது, 659/6னு ஒரு பெரிய score'ஓட முடிச்சாங்க நியூஸிலாந்து. 362 runs lead எடுத்து, அசைக்கவே முடியாத நிலைமையில நின்னாங்க. அங்க இருந்து, இந்த நாலாவது நாள்ல என்ன நடந்துச்சுன்னு இந்த Review Postல நாம பாக்கலாம்.
இன்னிக்கி பொறுத்த வரைக்கும், பாகிஸ்தானுக்கு முதல்ல 362 runs leadட ஒடைச்சு அதுக்கு அப்புறம் ஒரு score அடிச்சு targetடா நியூஸிலாந்துக்கு set பண்ணனும். ஆனா, முதல் inningsல இருந்த ஒரு போராடுற மனசு, ரெண்டாவது inningsல கொஞ்சம் கூட இல்ல. West Indies விட நல்லா விளையாடுன பாகிஸ்தானுக்கு, ரொம்பவே கொடுமையான முடிவு'னு சொல்லலாம்.
Kyle Jamieson, இந்த வருஷத்தோட find இவர் தான். 6.8 feet heightல ஒரு fast bowling all rounder கெடச்சா, அந்த team நிச்சயமா ஏதோ புண்ணியம் பண்ணியிருக்காங்கன்னு அர்த்தம். இப்போ இருக்குற உலகத்துல, நெறய countriesக்கு fast bowling all rounderனு ஒரு varietyயே இல்லாம போச்சு. அப்படி இருக்கும்போது, இவரோட வருகை, நியூஸிலாந்து teamம அடுத்த கட்டத்துக்கு கூட்டிட்டு போயிருக்கு.
இந்த test matchல, முதல் inningsல 5 wicket haul எடுக்குறாரு. ரெண்டாவது inningsல 6 wicket haul எடுத்து அசத்துறாரு. அதுவும் இன்னிக்கி அவர் செஞ்சது எல்லாம் ஒண்ணே ஒன்னு தான். குறிப்பிட்ட line and lengthல pitch பண்ணி, தன்னோட shoulder பயன்படுத்தி, bounce extract பண்ணுறாரு. பாக்கிஸ்தான் team மொத்தமும், அந்த ஒரு extra bounceல தன் மாட்டுனாங்க.
Short ball weakness பாகிஸ்தானுக்கு ரொம்பவே இருக்கு. இன்னிக்கி Azhar Aliயோட dismissalல நாம எடுத்து பார்த்தோம்னா, அதுல Jamieson பண்ணது எல்லாம் ஒண்ணே ஒன்னு தான். Neil Wagner மாதிரி, around the wicket வந்து, into the body lineல short length deliveries போட்டாரு. அதுல மாட்டுனாரு Azhar Ali.
கடைசி 5 innings, consistentடா விளையாடுன Mohammad Rizwan, 6வது inningsல சொதப்புறாரு. எல்லாருக்கும் short ball bowl பண்ணாங்க. ஆனா, இவருக்கு fuller lengthல inswinger bowl பண்ணுறாரு. இவரு out ஆனவர் தான், அதுல இருந்து பெரிய பாதாளத்துக்கு போயிட்டாங்க பாக்கிஸ்தான்.
176 runs வித்தியாசத்துல, நியூஸிலாந்து innings வெற்றி அடஞ்சியிருக்காங்க. அவங்களுக்கு, இதுக்கு அடுத்து test matches கெடயாது. ICC World Test Championship rankingல No.1 spot reach பண்ணியிருக்காங்க. இப்போ இதுக்கு அடுத்து, இவங்க finalsல meet பண்ண போகிறது யார் ? Australia or India. இந்தியாவுக்கும் சரி ஆஸ்திரேலியாவுக்கும் சரி, ஆளுக்கு ஒரு ஒரு test series கையில இருக்கு. ஆனா இதுல இந்தியாவுக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறதா நான் பாக்குறேன்.
அதுக்கு ஒரே காரணம், ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து இருக்குற series, South Africaவுக்கு againstடா awayல. அதுவே, இந்தியாவுக்கு Englandடுக்கு againstடா home groundல. அது காரணமா, இப்போ நடக்குற India vs Australia series ரெண்டு teamsசுக்கும் ரொம்ப முக்கியம்.
Comments
Post a Comment