BAN vs WI, 2021 - முதல் ODI Review
பங்களாதேஷ்'ஓட Capital City'ஆன தாக்காவுல இருக்குற Sher-e-Bangla Stadiumல தான் இந்த match நடக்குது. இந்த match'அ பொறுத்த வரைக்கும், பல நாள் கழிச்சு ரொம்பவே tricky'ஆன bowling surfaceல, batsmanகள test பண்ணுற விதத்துல அமையுது. இது T20 ரசிகர்களுக்கான match கெடயாது. ஆனா, one of the top class gamesன்னு நான் இதையும் சொல்லுவேன். அது ஏன் அப்படி சொல்லுறேன்னு இந்த blogல நாம பாக்கலாம்.
Match ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியும் சரி, match ஆரம்பிச்ச கொஞ்சம் நேரத்துலயும் சரி, மழை பெய்யுது. இந்த மழை காரணமா, pitchல slowness ஏற்படுது. அது கூடவே, overcast conditions இருக்குற காரணத்துனால batsmanகளுக்கு ஏத்த pitch கெடயாது. முதல் முறையா, full time captaincy பண்ணுற Tamim Iqbal, toss ஜெயிச்சு bowling choose பண்ணுறாரு.
West Indies teamம பொறுத்த வரைக்கும், 6 debutants வெச்சு உள்ள வர்றாங்க. Spin Bowlersக்கு எதிரா, west indies அந்த அளவுக்கு நல்லா விளையாட மாட்டாங்க. Pitch வேற ரொம்ப trickyயா அமைஞ்சிருக்கு. என்ன பண்ணப்போறாங்களோன்னு நெனச்சுட்டு இருக்கும்போது, ஆரம்பத்துல pacersகிட்ட wicket இழக்குறாங்க.
Spin assist trackனு சொன்னியே, pacersகிட்ட wicket விட்ருக்காங்க ? Spinக்கு ரொம்ப favourable'ஆன track தான். ஆனா, அதை தாண்டி, tight line and lengthல bowl பண்ணா, pitch நிச்சயமா கை கொடுக்கும். அந்த அடிப்படையில பாக்கும்போது, Bangladesh teamமோட debutantடான Hasan Mahmud, perfect seam positionனோட, stump to stump pitch பண்ணி bowl பண்ணாரு. அவருக்கு 3 wickets மடியில வந்து விழுது.
ஆனா, உண்மையான hero, ஷாகிப் அல் ஹாசன் தான். அவரோட சுழற்சியில சூழ்ந்தது தான் West Indies, மீண்டு எழவே முடில. தப்பான shot selection, கூடவே எந்த பக்கம் ball திரும்பும்ன்னு கணிக்காம உள்ளுக்குள்ள இருந்த குழப்பம், இதெல்லாம் தான் West Indies teamம மொத்தமா காவு வாங்குச்சு. ஆனா, அதை தாண்டி சில positives இருக்கு.
முதல் positive, Kyle Mayers'ஓட ஆட்டம். இஷ்டத்துக்கு திரும்புற ஒரு wicketல, ரொம்ப நேரம் நின்னு, அழகா விளையாடுன இவர் தான் முதல் positive. இன்னொரு பக்கத்துல சரியான support இல்ல. Rovman Powell, இடையில கொஞ்சம் aggressive intent காமிச்சதுனால, அங்க மட்டும் ஒரு 56 runs partnership வந்துச்சு. அதைத்தாண்டி, வேற யாரும் contribute பண்ணாததுனால, 122 runsக்கு all out ஆகுறாங்க.
திரும்ப, Bangladesh batting பண்ணுறாங்க. அவங்க pacers'அ அடிச்சி துரத்துறாங்க. அப்போ, இது one sided gameமா தான் முடியாபோவுதுன்னு எல்லாரும் நெனச்சிட்டு இருந்தாங்க. ஆனா, அது எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வெச்சு, நாங்களும் gameகுள்ள இருக்கோம்னு புரிய வெச்சவரு தான் Akheal Hosein.
Akheal Hosein, தன்னோட spell வந்து bowl பண்ணும்போது, பங்களாதேஷ் batsmanகளுக்கு ஒண்ணுமே புரியல. தப்பான lineல ballல pick பண்ண முடிவு செஞ்சு, சில wickets வேற விழுந்துட்டு இருந்துச்சு. இவரோட spellல எப்படியாவது கடந்து போவணும்னு தான் Shakib Al Hasanனும் Mushfiqur Rahmanனும், தரையோடவே விளையாடிட்டு இருந்தாங்க.
கிட்டத்தட்ட, 2015 World Cup Quarter finalsல Pakistanனும் ஆஸ்திரேலியாவும் மோதிர போட்டியில, Wahab Riaz'ஓட spell முடிவுக்கு வர்ற வரைக்கும் wait பண்ணி wait பண்ணி Australia விளையாடுவாங்க. அந்த மாதிரி தான், இங்கயும் Akheal Hoseinனோட spell முடிவுக்கு வர்ற வரைக்கும், தங்களோட கைகளை கட்டுப்படுத்திகிட்டு விளையாடுனாங்க.
Comments
Post a Comment