SRH vs RCB | IPL 2020 | Eliminator | திருப்புமுனை Segment
நேத்து, ஹைதராபாத்துக்கும் பெங்களூருக்கும் இடையில Eliminator match நடந்துச்சு. இந்த match'அ ஜெய்க்குறவன் qualifier 2 matchகு போவான், அதே தோக்குறவன் வெளில போயிடுவான். Toss ஜெயிக்கிற SRH, முதல்ல bowling choose பன்றாங்க. ஹைதராபாத்துக்கு அவங்க நெனச்ச மாதிரி, RCB'ய புரட்டி எடுத்தாங்க. முதல் ஓவர்ல இருந்தே சரிவு தான். AB De Villiers மட்டுமே 50 அடிச்சாரு, அது காரணமா 131/7னு ரொம்ப சின்ன score அடிக்கிறாங்க. இந்த scoreர, Kane Williamson மற்றும் Jason Holder சேர்ந்தே கடைசி ஓவர் வரைக்கும் கொண்டு போயி ஜெயிக்குறாங்க.
இந்த match'ஓட Post Match Analysis videoவ என்னோட Cric Muhan YouTube channelல post பண்ணியிருக்கேன். Click பண்ணி பாருங்க, அப்டியே அந்த subscribe buttonனையும் click பண்ணிடுங்க.
நான், இந்த matchல சொல்ல போற turning point நீங்க எல்லாரும் எதிர்பார்த்த ஒரு சம்பவம் தான். பெரிய twist இல்லைல, அப்புறம் எதுக்கு இவ்ளோ பெரிய paragraph எழுதுறன்னு நீங்க கேட்டிங்கன்னா அதுக்கு எனக்கு பதில் இல்ல. ஆனா, அப்படி தெரியாதவர்களுக்கு இந்த blog உதவும். அந்த சம்பவம் என்னன்னு இந்த blogல பாக்கலாம்.
இந்த match'அ பொறுத்த வரைக்கும், அந்த நெறைய பேருக்கு தெரிஞ்சு சில பேருக்கு தெரியாம இருக்குற அந்த சம்பவம் வேற ஏதும் இல்ல, Holder'ஓட all round performance தான். குறிப்பா, அவரோட bowling, அது தான் இந்த match ஜெயிக்கிறதுக்கு base set பண்ணி கொடுத்துச்சு. இதுக்கு அடுத்து Natarajanனோட அந்த ஒரு Yorker. ABDய விட்டு வெச்சா, score'ஓட நிலைமையே மாத்தி அமைச்சிடுவாரு. அதுவும் 50 அடிச்சு set ஆகியிருந்த situationல, அந்த மாதிரி ஒரு yorker delivery வீசி dismiss பண்ணாரு. அங்க தான் அந்த score 130ல நிறுத்திருதுக்கு உதவியா இருந்துச்சு.
Comments
Post a Comment