SRH vs KKR | MI vs KXIP | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, double header games நடந்துச்சு. அந்த ரெண்டு matchesஉம், சரிக்கு சமமா போட்டி போட்டு, Tie ஆகி, Super Overல போயி முடிஞ்சிது. இதுல ஒன்னு, முதல் Super Overலேயே result வந்தாலும், இன்னொரு match, முதல் Super Over நடந்து, அந்த Super Over tie ஆகி, திரும்ப ரெண்டாவது Super Overல match result conclude ஆச்சு. இந்த ரெண்டு matches'ஓட turning point moments தான் இந்த திருப்புமுனை segmentல நாம பார்க்கலாம்.
முதல் match, Hyderabadக்கும் Kolkataவுக்கும் இடையில, Abu Dhabiல match நடக்குது. Toss ஜெயிக்கிற SRH அணி முதல்ல bowling choose பன்றாங்க. ஒரு நல்ல start கெடைச்சதுக்கு அப்புறம், இடையில slump. என்னடா இது, low scoreல முடிஞ்சிடுமோன்னு நினைக்கும்போது, அப்படிலாம் எதுவும் இல்ல, நாங்க இருக்கோம்ன்னு, DKவும் Morganனும் சேர்ந்து decentடா finish பன்றாங்க. அதுக்கு அடுத்து, Hyderabadடும் நல்ல start கொடுக்குறாங்க. 1st inningsல என்ன நடந்துச்சோ அதே தான் 2nd inningsல நடந்துட்டு இருந்துச்சு. ஆனா, ஒரு அமைதி போர் நடந்துட்டு இருந்துச்சு. ஒரு பக்கம் Ferguson, சர்ரு சர்ருன்னு stump to stump lineல குறிவெச்சு வீசிக்கிட்டு இருந்து, wickets எடுத்துக்கிட்டு இருக்காருன்னா, இன்னொரு பக்கம் Warner கடைசி over வரைக்கும் போராடி கொண்டு போறாரு. செமயான battle நடக்குது, இந்த battleலும் tieல போயி முடியுது. Super Overல SRH வெறும் 2 ரன் தான் எடுக்குறாங்க. அதை, ரொம்ப easyயா chase பன்றாங்க.
இந்த match'ஓட Post Match Analysis videoவ என்னோட YouTube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம click பண்ணி பாருங்க !!
இந்த match'ஓட turning point, வேற யாரும் இல்ல, Lockie Ferguson தான். இந்த மனுஷன, இத்தனை நாளா எங்க தான் ஒளிச்சி வெச்சிருந்தீங்க ? அப்படின்னு கேக்க தோணுது. Seriously, out and out, ஒரு extraordinary performance கொடுத்தாரு. Match'ல 4 oversகு 3 wickets எடுத்து 15 runs கொடுத்தாரு. Match'ஓட தலையெழுத்தையே மாத்துன spellலா அமைஞ்சுது. கூடவே, Super Overல வெறும் 2 ரன் கொடுத்துட்டு 2 wickets எடுக்குறாரு. Complete Domination !!!
இதுக்கு அடுத்து தான், இன்னும் பெரிய fight பார்க்க முடிஞ்சுது. நாடி, நரம்பு வரைக்கும் போராட்டம். முதல்ல MI toss win பண்ணி batting choose பன்றாங்க. Innings முழுக்க ஏகப்பட்ட wickets விட்டாலும், ஆரம்பித்துல Quinton De Cock அடிச்ச 50 மற்றும் deathல Pollard and Coulternile அடிச்ச அடி, teamம காப்பாத்துது. திரும்ப, வழக்கம் போல Rahul நல்ல game ஆடுறாரு, கூடவே Pooran and Hooda, சேர்ந்து சில contribution கொடுத்து, gameம கட்டுக்குள்ள வெச்சுக்கிட்டே வர்றாங்க. அந்த பக்கம் அப்படின்னா இந்த பக்கம் Bumrah, எப்போ wickets தேவையோ, அப்போ எல்லாம் wickets எடுத்துட்டு தான் இருக்காரு. இந்த match Tieல முடியுது. Super Over நடக்குது. Super Overல முதல்ல KXIP batting பன்றாங்க. Bumrahவோட yorkers execution காரணமா வெறும் 5 runs தான் அடிக்கிறாங்க. 5 runs தான் அடிச்சியிருக்காங்க, கண்டிப்பா MI தான் ஜெயிக்கப்போறாங்க'ன்னு எல்லாரும் நினைக்கும்போது, Bumrahவுக்கு சளச்சவன் நான் இல்லன்னு Shamiயம் continuousஅ yorkers execute பண்ணுறாரு. இவங்களும் திரும்ப வெறும் 5 runs தான் அடிக்கிறாங்க. So, Super Overலயும் Tie. திரும்ப ஒரு Super Over நடக்குது. இந்த Super overல போன வாட்டி விளையாடுன players யாரும் இந்த முறை விளையாடக்கூடாதுன்னு rule வருது. MI battingகு வராங்க. வெறும் 11 runs தான் அடிக்கிறாங்க. அதுல, KXIPயோட fielding அட்டகாசமா இருக்கு. அதுக்கு அடுத்து, KXIP easyயா chase பன்றாங்க.
இந்த match'ஓட Post Match Analysis videoவ நான் Cricmuhan YouTube channelல upload பண்ணியிருக்கேன். Confirm பாருங்க !
இதோட turning point, Boult'ஓட bowling தான். அவரோட line and lengthத easyயா அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நெனச்ச எடத்துல ballல pitch பண்ண முடில. Slotலயும், Outside off stumpலயும் bowl பண்ணிகிட்டே இருக்காரு. அதுல மாட்டுனது தான், MIக்கு மொத்த match'உம்.
Comments
Post a Comment