இந்தியாவுக்கு அடிக்கு மேல் அடி !
இன்னும், 4 நாட்களில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெறவிருக்கிறது. இத்தொடர், 3 ஒரு நாள் போட்டிகளுடன் துவக்கம் பெற்று, பின்னர் 3 T20I போட்டிகளைக் கொண்டு, இறுதியாக 4 டெஸ்ட் போட்டிகளுடன் நிறைவாகவுள்ளது. இதில், விராட் கோலி அவர்கள் தன்னுடைய முதற் பிள்ளையை பெறவிருப்பதால், இறுதியாக நடைபெறவிருக்கும் 3 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஓர் அடி.
இந்தியாவில் விளையாடும் போட்டிகளாக இருந்தால், யாரைவேண்டுமெனில் நியமித்து விளையாடலாம். ஆனால், நடைபெறுவதோ ஆஸ்திரேலியாவில். அங்கு, விராட் கோலி போன்ற தூண் இல்லாதது, இந்திய அணியின் பேட்டிங்கை வலுவிழக்கச்செய்யும். பேட்டிங்கை கடந்து, ஒரு தலைவனாக விராட் கோலி அவர்களின் யுக்திகளை, வேறு யாராலும் நிகழ்த்தவியலாது. ஆதலால், தேரில் உள்ள சக்கரமின்றி பயணம் மேற்கொள்ளும் இந்தியாவுக்கு அடுத்து வெளியாகிய செய்தி, ரோஹித் ஷர்மா மற்றும் இஷாந்த் ஷர்மாவின் பங்கேற்பை குறித்து.
இவ்வாண்டின் IPL தொடர் நடைபெற்றுக்கொண்டது. அப்போது, இத்தொடரின் இடையிலேயே இஷாந்த் ஷர்மா அவர்கள், காயம் காரணமாக வெளியாகியுள்ளார். ரோஹித் ஷர்மா அவர்களும், காயம் காரணமாக 3 போட்டிகள் விளையாடவில்லை. ஆனால், பின்னர் நடைபெற்ற Knockout சுற்றில் பங்குபெற்று தனது அணியை, வெற்றிபெற செய்தார். ஆனால், காயம் அவரை விட்டு விலகாமல், விக்கிரமாதித்தன் தோளில் பயணிக்கும் வேதாளம் போன்று, உடனுக்குடனாகவே பயணித்துக்கொண்டிருக்கிறது.
தற்போது, இருவருமே பெங்களூரில் உள்ள National Cricket Academyல் பயிற்சி பெற்று வருகின்றனர். ஆனால், அவர்களின் உடனலம் சிறிதும் முன்னேறவில்லை என்றே சிகிச்சையின் முடிவுகள் வெளிக்காட்டுகிறது. இதனைப்பற்றி ரவி சாஸ்திரி கூறியது, " டெஸ்ட் தொடரில் பங்குபெற வேண்டுமெனில், இன்னும் 3-4 நாட்களுள், விமானத்தில் இவர்கள் ஏறி பயணிக்கவேண்டும். தனிமைப்படுத்தும் காலம் முடிவடைந்து, பின்னர் பயிற்சியில் ஈடுபட்டு, தம்மை கூரான கத்தியைப் போன்று மாற்றவேண்டும். 3-4 நாட்களுள் ஏறவில்லை என்றால், இவர்களால் தொடரில் பங்கேற்க இயலாது. "
ரோஹித் ஷர்மா அவர்களை வெறும் டெஸ்ட் தொடரில் நியமித்தது இந்திய அணி. இஷாந்த் ஷர்மா அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகின்றார். இவ்வாறு உள்ள நிலையில், இந்திய சர்வதேச கிரிக்கெட் அணியின் முக்கிய புள்ளிகள் இல்லாமல் பயணிப்பது, இந்திய அணியின் வெற்றி சதவீதத்தை மேலும் குறைக்கிறது. ஆஸ்திரேலியா அணியே வெற்றிபெற வாய்ப்புகள் பல உள்ளது.
ஷ்ரேயஸ் ஐயர் அவர்களை, திரும்ப வராமல் டெஸ்ட் தொடரில் உள்ள backup வீரராக நியமித்துள்ளது BCCI. ஷ்ரேயஸ் ஐயர் அவர்கள் இதில் மட்டும், தன்னை நிரூபித்துக்கொண்டால், அவருடைய கிரிக்கெட் வாழ்வு மேலும் உயரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆனால், இந்திய அணிக்கு நிச்சயமாக ஓர் பெரிய அடி காத்துக்கொண்டிருக்கிறது. டெஸ்ட் தொடரில், மண்ணை கவ்வ பல வாய்ப்புகள் உள்ளது. ஜெயித்தால், உலகில் உள்ள 7 அதிசயங்களைக் கடந்து 8ம் அதிசயமாக இச்சம்பவம் திகழும். இருப்பினும், தோல்விகளுக்கு பழகிக்கொள்வோம்.
Comments
Post a Comment