Lanka Premier Leagueல் உள்ள அணி மாற்றங்கள் 2020/21
பல மாற்றங்களுக்குப்பின், இலங்கையில் நடக்கவிருக்கும் உலகத்தர 20 over cricket தொடரான, Lanka Premier League, November மாதம் 21ம் தேதியன்று துவக்கம் பெற்று December மாதம் 13ம் தேதியன்று நிறைவு பெறவிருக்கிறது. Colomba, Galle, Dambulla, Jaffna மற்றும் Kandy, ஆகிய ஐந்து நகரங்களை மையமாகக் கொண்டு, 5 அணிகள் மட்டுமே பங்குபெறவுள்ளது. இவற்றை தொடர்ந்து, தற்போது இதற்கான ஏலம் நடைபெற்றுள்ளது. அதனை பற்றி இப்பதிவில் நாம் காணவுள்ளோம்.
Irfan Pathan, மீண்டும் cricket களத்தினுள், தனது கால் தடங்களை பதிக்கவுள்ளார் என நானே என் கைப்பட எழுதிய செய்தி, வெறும் வதந்தியென்று, இந்த ஏலம் நிரூபித்து உள்ளது. அதற்கு, நான் என்னுடைய மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், அவர் அல்லாது, மற்ற சில இந்திய கிரிக்கெட் வீரர்களான Manwinder Bisla மற்றும் Manpreet Gony, இதில் பங்கேற்பது மகிழ்ச்சியை வரவழைக்கின்றது. ஆனால், இதற்கு மேல் அவர்களால் IPL மற்றும் எவ்வித இந்திய நாட்டை சேர்ந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற இயலாது.
ஐந்து அணிகளான Colombo Kings, Dambulla Hawks, Galle Gladiators, Jaffna Stallions மற்றும் Kandy Tuskers, போன்ற அனைத்து அணிகளிலும், 20க்கும் அருகில் எண்ணிக்கை உள்ள வீரர்களை எடுத்துள்ளார்கள்.
1. Colombo Kings
Local வீரர்கள் - Angelo Mathews, Isuru Udana, Dinesh Chandimal, Amila
Aponso, Ashan Priyanjaya, Dushmantha Chameera, Jeffery Vandersay, Thikshila de Silva, Pht Kaushal,
Lahiru Udara, Himesh Ramanayka, Kalana Perera, Tharindu Rathnayaka, Navod Paranawithana.
Overseas வீரர்கள் - Andre Russell, Faf du Plessis, Manpreet Singh Gony, Manvinder Bisla, Ravinderpal Singh
Canada நாட்டை சேர்ந்த முதல் வீரரான Ravinderpal Singh, இதில் பங்கேற்கின்றார் எனும் செய்தி மகிழ்ச்சியை வரவழைக்கின்றது.
2. Dambulla Hawks
Local வீரர்கள் - Dasun Shanaka, Niroshan Dickwella, Lahiru Kumara, Oshada Fernando, Kasun Rajitha, Lahiru Madushanka, Upul Tharanga, Angelo Perera, Ramesh Mendis, Pulina Tharanga, Ashen Bandara, Dilshan Madushanka, Sachindu Colombage
Overseas வீரர்கள் - David Miller, Carlos Brathwaite, Samit Patel, Paul Stirling
3. Galle Gladiators
Local வீரர்கள் - Lasith Malinga, Danushka Gunatilleka, Bhanuka Rajapaksa, Akila Dananjaya, Milinda Siriwardena, Lakshan Sandakan, Shehan Jayasuriya, Asitha Fernando, Nuwan Thushara, Mohomed Shiraz, Dhanjaya Lakshan, Chanaka Ruwansiri
Overseas வீரர்கள் - Shahid Afridi, Colin Ingram, Hazratullah Zazai, Mohammad Amir, Sarfraz Ahmed, Azam Khan
4. Jaffna Stallions
Local வீரர்கள் - Thisara Perera, Wanindu Hasaranga, Avishka Fernando, Dananjaya de Silva, Suranga Lakmal, Binura Fernando, Minod Bhanuka, Chathuranga de Silva, Mahesh Theekshana, Charith Asalanka, Nuvinidu Fernando, Kanagaratnam Kapilraj, Theivendiram Dinoshan, Yiyakanth Yiyaskanth
Overseas வீரர்கள் - Dawid Malan, Shoaib Malik, Usman Shinwari, Asif Ali
5. Kandy Tuskers
Local வீரர்கள் - Kusal Janith Perera, Kusal Mendis, Nuwan Pradeep, Seekkuge Prasanna, Asela Gunerathne, Kamindu Mendis, Dilruwan Perera, Priyamal Perera, Kavisha Anjula, Lasith Embuldeniya, Lahiru Samarakoon, Nishan Madushka Fernando, Chamika Edirisinghe, Ishan Jayaratne
Overseas வீரர்கள் - Chris Gayle, Liam Plunkett, Wahab Riaz, Naveen-ul-Haq
இவ்வாறு அனைத்து அணிகளும் வலுவுடன் காணப்பட்டாலும், என்னைப்பொறுத்த வரை, Jaffna Stallions அணியினுள் தான் பல உள்நாட்டு வீரர்கள் பங்குபெறவுள்ளார்கள். இளம் இரத்தங்கள் நாளைய எதிர்காலத்தின் தூண்கள். இது விளையாட்டு துறையில் மட்டும் இல்லை, நாட்டின் மற்ற அனைத்து துறைகளுக்கும் இது பொருந்தும். இவ்வாறு பல இளம் சிங்கங்கள், இலங்கை சர்வதேச நாட்டிற்கும் இடம் பெற்று, வரலாற்று சிறப்புமிக்க அணியாக மீண்டும் உருவெடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் இப்பதிவை நான் முடித்துக்கொள்கிறேன்.
Comments
Post a Comment